திருச்சி, மே 14: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதி 313 கொடுக்க காலதாமதம் ஏற்படுத்தி வரும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பட்டை நாமம் போட்டு தலைவிரி கோலத்தில் மடியேந்தி பிச்சையெடுக்கும் ேபாராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மவட்ட தலைவர் சவுரிமுத்து தலைமை வகித்தார்.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் வளனரது போராட்டத்தை துவக்கி வைத்தார். மாநில துணை தலைவர் நிறைவுரையாற்றினார். இந்த போராட்டத்தில் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் என 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.