ராமநாதபுரம், ஆக.31: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்காயம் பிரிவு துவங்க வலியுறுத்தி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு எம்.பி தர்மர் தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முத்துமுருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் எம்.பி தர்மர் கூறுகையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து, அவசர சிகிச்சைப் பிரிவு, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்ட வசதிகள் இருந்தாலும் முக்கியமாக இருக்க வேண்டிய உயிர்காக்கும் தலைக்காய சிகிச்சை பிரிவு இன்னும் துவங்கப்படவில்லை.
ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம்
previous post