சேந்தமங்கலம், நவ.16: எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் ஓட்டல்கள், மளிகை கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றில், பேரூராட்சி செயல் அலுவலர் நாகேஷ் தலைமையில், இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ் மற்றும் பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். கடைவீதி, ராஜவீதி, துறையூர் சாலை, புதிய பஸ் ஸ்டாண்ட், சந்தை வளாகம், கைகாட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நடந்த சோதனையின் போது, பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், மளிகை கடைகள் டீக்கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர். இந்த சோதனையின் போது, 25 கிலோ பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல் செய்யப்பட்டது. ேமலும், ₹6,500 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஓட்டல், மளிகை கடைகளில் பிளாஸ்டிக் கேரிபேக் பறிமுதல்
0
previous post