Monday, December 11, 2023
Home » ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் புதுவை ரவுடி உள்பட மேலும் 3 பேர் கைது

ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் புதுவை ரவுடி உள்பட மேலும் 3 பேர் கைது

by Karthik Yash

நெய்வேலி, நவ. 1: நெய்வேலி ஓட்டல் உரிமையாளர் கொலை வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் புதுச்சேரி பிரபல ரவுடி உள்பட ேமலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 20ல் வசித்து வந்தவர் கண்ணன் (56). இவருக்கு மனைவி, ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர் நெய்வேலி சூப்பர் பசாரில் பிரியாணி கடை நடத்தி வந்தார். கடந்த 26ம் தேதி தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு பைக்கில் சென்றபோது மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த ராஜவேல் மகன் எழில்நிலவன் (38), குமார் மகன் ஆகாஷ் (எ) டக்ளஸ் (22), நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோயில் தெருவை சேர்ந்த பஷீர் மகன் சல்மான்கான் (20). நெய்வேலி வட்டம் 27 சுண்ணாம்பு தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் சதீஷ் (22), நெய்வேலி வட்டம் 30 கன்னிகோயில் தெருவை சேர்ந்த லட்சுமி காந்தன் மகன் சக்திவேல் (19) ஆகிய 5 பேரை தனிப்படை மற்றும் டெல்டா போலீசார் கைது செய்தனர்.

இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான புதுச்சேரி வில்லியனூர் பெரியபேட்டை பள்ளிக் கூடம் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி ரவிவர்மா (எ) பாம் ரவி, ெநய்வேலி வட்டம் 30 கன்னிக்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பிரசாந்த் (24). வட்டம் 21 புதுதெருவை சேர்ந்த வீரபாண்டி மகன் சுபாஷ் (19) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கரூர் மாவட்டத்தில் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 8 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கண்ணன் நடத்தி வரும் பிரியாணி கடைக்கு சென்ற விக்கி மற்றும் ஏழில் நிலவன் இலவசமாக பிரியாணி கேட்டு அவர் தராததால் ஆத்திரமடைந்த இருவரும் அவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதில் விக்கி மற்றும் எழில் நிலவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்த எழில் நிலவன், புதுச்சேரி பிரபல ரவுடி பாம் ரவியை அணுகி அவர்களை கூலிப்படையாக பயன்படுத்தியது தெரிகிறது. பின்னர் மேற்கண்ட இருவர் மற்றும் ரவுடி பாம்ரவி தலைமையிலான கும்பல் உள்பட 8 பேர் இந்த கொலையை செய்ததாக வாக்குமூலத்தில் கூறியுள்ளனர். கைது நடவடிக்கையின்போது தப்பி ஓடிய பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் பிரசாந்த் தவறி விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?