கன்னியாகுமரி, பிப்.15: கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கன்னியாகுமரி ரவுண்டானா பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் விஜயன் தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சுப உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட இளைஞரணி செயலாளர் அஜித் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டல்களில் தமிழில் பெயர் பலகை வைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி ஆர்ப்பாட்டம்
0