எட்டயபுரம், ஆக. 15: எட்டயபுரம் அருகே உள்ள கீழஈராலில், தூத்துக்குடியை சேர்ந்த பிரான்சிஸ்(46) என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். கடந்த 10ம் தேதி இரவு இவரது கடையை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் கல்லாபெட்டியில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடிச் சென்றனர். மறுநாள் கடையை திறக்க வந்தபோது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் எட்டயபுரம் எஸ்ஐ வசந்தி மற்றும் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்புராஜ் மகன் சுந்தரபாண்டி(19), சுயம்புலிங்கம் மகன் மாரிச்செல்வம் (20) ஆகிய இருவரும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர்.