திருப்பூர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு நீர்நிலை பகுதிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. திருப்பூர் மாநகரின் வழியே செல்லும் நொய்யல் ஆற்றில் கடந்த 3 தினங்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் அவை அருகிலுள்ள ஓடைகளிலும் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. அவ்வாறு செல்லும் பட்சத்தில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் ஓடைகளை தூர்வாரும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் ஏபிடி ரோடு பகுதியில் உள்ள ஓடையை ஜேசிபி உள்ளிட்ட வாகனங்கள் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்றது.