கோபி, ஜூலை 1: கோபியில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
பவானி அருகே உள்ள பெருமாம்பாளையம் ஆண்டிகாடு தோட்டத்தை சேர்ந்தவர் கருப்பன் மனைவி கமலம்(76). இவர் கடந்த 16ம் தேதி கோபி பேருந்து நிலையத்தில் இருந்து மார்க்கெட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்துள்ளார். பேருந்தில் கூட்டமாக இருக்கவே, மார்க்கெட்டில் இறங்காமல் கரட்டடிபாளையம் சென்று பேருந்தில் இருந்து இறங்கி உள்ளார்.
கரட்டடிபாளையத்தில் இறங்கிய போது, அவர் அணிந்து இருந்த 5 பவுன் நகை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. பேருந்தில் இருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகே நின்ற பெண் ஒருவர் நகையை திருடி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து கமலம் அளித்த புகாரின் அடிப்படையில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.