மூணாறு, ஜூன் 25: மூணாறு அருகே ஓடும் பேருந்திலிருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளா மாநிலம் மூணாறிலிருந்து நேற்று மதியம் தனியார் பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன், எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே உள்ள ஹெட்ஒர்க்ஸ் அணைப்பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன் சக்கரம் திடீரென கழன்று ஓடியது.
இதனையறிந்த ஓட்டுநர், பேருந்தை சாமர்த்தியமாக நிறுத்தினர். பேருந்தில் இருந்து கழன்று ஓடிய சக்கரம், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவின் முன்பக்கம் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ஆட்டோவில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.