குடியாத்தம், ஜூலை 6: குடியாத்தம் அருகே நகைகளை விற்று சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பஸ்சில் சென்ற பெண்ணிடம் ரூ.1.94 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது மனைவி வினோதினி. இவர் நேற்று முன்தினம் குடியாத்தம் சந்தப்பேட்டை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடைக்கு சென்று தனது நகைகளை விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.1 லட்சத்து 94 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு குடியாத்தம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காட்பாடியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றாராம். குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது தனது பையை திறந்து பார்த்துள்ளார். அப்போது பையில் வைத்திருந்த ரூ.1.94 லட்சம் திருட்டுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். மர்ம ஆசாமிகள், பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இந்த துணிகர திருட்டு குறித்து வினோதினி குடியாத்தம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1.94 லட்சம் அபேஸ் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1.94 லட்சம் அபேஸ் குடியாத்தம் அருகே துணிகரம் சிகிச்சைக்காக நகையை விற்று எடுத்துச்சென்றார்
0
previous post