பந்தலூர்,ஆக.30: பந்தலூர் அருகே தேவாலா நீர்மட்டம் பகுதியில் ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ராஜுஷா(19). நேற்று இவருக்கு பிரசவ வலி ஏற்படவே, நேற்று ஆம்புலன்ஸ் மூலம் சேரம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்மாறு அறிவுறுத்தினர்.
இந்நிலையில் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது தேவாலா நீர்மட்டம் பகுதியில் பிரசவ வழியால் துடித்துடித்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கோபிநாத் மற்றும் ஈஎம்டி கோகுல் ஆகியோர் பெண்ணிற்கு பிரசவம் பார்த்து அதன்பின் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பார்கமுடியாமல் அனுப்பிய கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிகிறது.