கிருஷ்ணகிரி, மே 24: கர்நாடகா மாநிலத்திலிருந்து ஓசூர் வழியாக கோவைக்கு கடத்தியபோது 396 கிலோ குட்கா, சரக்கு வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஓசூர் ரிங் ரோடு, கொத்தூர் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் டவுன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கர்நாடகாவில் இருந்து ஓசூர் வழியாக சரக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 396 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக வேனை ஓட்டி வந்த பெங்களூரு கே.ஜி.அள்ளி பகுதியைச் சேர்ந்த மாரிசாமி (46) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், கர்நாடக மாநிலத்திலிருந்து கோவைக்கு குட்காவை கடத்த முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து, 396 கிலோ குட்கா மற்றும் சரக்கு வேனை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.7.47 லட்சம் இருக்கும். இதுதொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூர் வழியாக கோவைக்கு கடத்திய 396 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல்
0
previous post