ஓசூர், செப்.1: ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் காந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஓசூர் மாநகராட்சியில் காலி மனை வரி, சொத்துவரி, சொத்துவரி பெயர் மாற்றம், ஏலம் மற்றும் குத்தகை இனங்கள், கடை வாடகை, புதிய குடிநீர் இணைப்பு, குடிநீர் பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு பழுது பார்த்தல், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை பொதுமக்களுக்காக வழங்கப்படும். இந்த சேவைகள் தேவைப்படும் பொதுமக்கள் நாளை (2ம் தேதி) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஓசூர் மாநகராட்சியில் நாளை சிறப்பு முகாம்
previous post