ஓசூர், செப்.4: பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் ஓசூரை சேர்ந்த மாணவி பேட்மிண்டன் விளையாட்டில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முனீஸ்வர் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவன். இவர், டைட்டான் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் நித்ய, பெங்களூருவில் பிபிஇ படித்து வருகிறார். இவர், பாரிஸில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்று, பேட்மிண்டன் விளையாட்டில் பங்கேற்றார். இதில், அவர் 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா மற்றும் அவரது பயிற்சியாளர்கள் நித்யக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஓசூர் மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை
previous post