ஓசூர், மே 28: ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்வதாக ஓசூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவிற்கு(பொ) ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். அப்போது, அங்குள்ள கப்பக்கல் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று முறையாக விசாரித்தனர்.
இதில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ரபிந்திரநாத் சாஹூ(25), சரவன்குமார்(29) என்பது தெரிய வந்தது. ஓசூர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றியவாறு, அவ்வப்போது கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து கஞ்சா வாங்கி வந்து விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே, இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.