ஓசூர், மே 15: ஓசூரில் மின்வாரியம் சார்பில், களப்பணியாளர்களுக்கு சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை, கிருஷ்ணகிரி மின் பகிர்மான மாவட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வக்குமார் வழங்கினார். ஓசூர் கோட்ட செயற்பொறியாளர் குமார் தலைமையில், 7 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட 20 பிரிவுகளில் பணி புரியும் 230 களப்பணியாளர்களுக்கு, தலைக்கவசம், இடுப்பு கயிறு, மழை அங்கி, கைவிளக்கு, பாதை விலக்கி, மின் இழை, ரப்பர் நில விரிப்பு, மூவிங் காண்டாக்ட், பிக்சட் காண்டாக்ட் மற்றும் மரம் அறுக்கும் ரம்பம் உள்ளிட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன.இந்த பாதுகாப்பு உபகரணங்களை, கட்டாயம் ஒவ்வொரு களப்பணியாளரும் பொறுப்புடன் பயன்படுத்தி, கிருஷ்ணகிரி மின் பகிர்மான மாவட்டத்தில் விபத்துகளே இல்லாத மாவட்டமாக செயல்பட வேண்டும் என மேற்பார்வை பொறியாளர் அறிவுறுத்தினார்.
ஓசூரில் மின்வாரியம் சார்பில் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மேற்பார்வை பொறியாளர் வழங்கினார்
0
previous post