புதுக்கோட்டை,ஆக.12: ஒழுங்கீனமாக நடந்து கொண்ட சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலரை திருச்சி சரக டிஐஜி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டையைச் சேர்ந்த சுரேஷ். இவர் அரியலூர் ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்.இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு ஒரு பெண் சப்.இன்ஸ்பெக்டருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய ரேவதி என்பவரை சுரேஷ் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து புகார் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் காவலர் ரேவதி, சுரேஷுடன் சேர்ந்து வாழ்ந்து வருவதை ஒப்புக் கொண்டார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் காவலர் ரேவதி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தவிட்டுள்ளார்.