ஓசூர், ஜூலை 27: ஓசூர் காரப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது வீட்டில் வளர்த்து வரும் பிரம்ம கமலம் செடியில், ஆண்டிற்கு இரண்டு முறை பூக்கள் பூப்பதாக கூறப்படுகிறது. இரவில் மலரும் இந்த பூக்கள் காலை நேரத்தில் மொட்டாக மாறிவிடுகிறது. இந்நிலையில், இளையராஜா வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில், ஒரே நேரத்தில் 80 பிரம்ம கமல பூக்கள் பூத்தது. அந்த பூக்களுக்கு அவரது குடும்பத்தினர் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். ஒரே செடியில் பூத்த 80 பூக்களை அப்பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்த்து சென்றனர்.
ஒரே செடியில் பூத்த 80 பிரம்மகமலம் பூக்கள்
56
previous post