Saturday, June 10, 2023
Home » ஒரு நாள் டிஜிட்டல் விரதம்

ஒரு நாள் டிஜிட்டல் விரதம்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் விரதம் என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமே தொடர்புடையதல்ல; மருத்துவரீதியாகவும் பல நன்மைகள் தரக் கூடியது என்று பல்வேறு புதிய ஆய்வுகள் தெரிவித்து வருகின்றன. இதுபோலவே, இணையதளப் பயன்பாட்டை தவிர்ப்பதற்கு Digital fasting என்று செல்லமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த டிஜிட்டல் விரதத்தைப் பலரும் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள்.இணையதளப் பயன்பாடும், மொபைல் பயன்பாடும் அதீதமாகப் போய் கொண்டிருக்கிறது. இவை இல்லாமல் ஒரு நாள் வாழ்க்கை இயங்காது என்கிற அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. இந்த டிஜிட்டல் பயன்பாட்டின் அதீத நுகர்வால் பல்வேறு உடல், மனநல பிரச்னைகள் எழுகிறது என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வருகிறார்கள். இந்த அபாயத்தை தாமதமாக உணர்ந்த நெட்டிசன்கள், இணையதளப் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இதன் ஒரு ஆரம்பமாக, வாரம் ஒரு நாள் டிஜிட்டல் விரதம் இருக்கவும் தொடங்கியிருக்கின்றனர். இதற்காக ஒரு நாள் முழுவதும் மொபைல், லேப்டாப், கம்ப்யூட்டர் போன்ற எந்த சாதனங்களையும் உபயோகிக்கக் கூடாது என்று முடிவு செய்திருக்கிறார்கள். டி.வி, சினிமா போன்ற திரை சார்ந்த பொழுதுபோக்குகளுக்கும் இந்த நாளில் தடா. இந்த டிஜிட்டல் விரதத்தை சென்னைவாசிகளில் சிலர், கடந்த ஜூன் மாதம் வெற்றிகரமாக துவங்கியிருக்கிறார்கள். ப்ளாக்கர் ஒருவர் இதற்காக தனி குழு ஒன்றை இணையதளத்திலேயே(?!) உருவாக்கி விருப்பமுள்ளவர்களை ஒன்று சேர்த்திருக்கிறார். இதன் அடிப்படை புரிந்த, ஆர்வம் இருப்பவர்கள் பலரும் அந்த குழுவில் சேர்ந்திருக்கிறார்கள். வாரத்தின் ஒரு நாள் என்ற அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை இதற்காகத் தேர்வு செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ‘இது நல்ல விஷயம்தான். ஏற்கெனவே, ஜப்பானில் டிஜிட்டல் ஃபாஸ்ட்டிங்குக்காக முகாம்கள் கூட அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். Internet fasting camp என்ற இந்த முகாம்கள் காலத்தின் அவசியமாக இருக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு தேச எல்லைகளை கடந்து எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பதால், இது எல்லோரும் பின்பற்ற வேண்டிய விரதமும் கூட என்று மருத்துவர்கள் இதனை மனமார வரவேற்கிறார்கள்!இதைப் படிக்கிற நீங்களும் டிஜிட்டல் ஃபாஸ்ட்டிங்கை சவாலாக எடுத்துக் கொண்டு, ஒரு நாள் முயற்சி செய்துதான் பாருங்களேன்! – வி.ஓவியா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi