ஆத்தூர், டிச.12: ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் செயல்படும் டீக்கடைகள் மற்றும் ஸ்வீட் கடைகள், காய்கறி, மளிகை கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஓட்டல்களில் பொருட்களை சில்வர் கவர்களில் பார்சல் அளிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது. இதையடுத்து, ஆத்தூர் நகராட்சி சுகாதார பிரிவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பழைய பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள மொத்த விற்பனை கடை ஒன்றில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் டீ கப்புகள், சில்வர் பேப்பர்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து நகராட்சி ஊழியர்கள், ஒரு டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளருக்கு ₹10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஒரு டன் பிளாஸ்டிக் கேரி பேக் பறிமுதல் ₹10ஆயிரம் அபராதம்
0
previous post