கரூர், செப் 6: கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற 2 பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி அடுத்துள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசார்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.