தஞ்சாவூர், ஜூன் 23: ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் வரும் 27ம் தேதி மக்களடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற உள்ளது என கலெக்டர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மற்றும் அனைத்து தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். முகாம்கள் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.
அதன்படி ஒரத்தநாடு வட்டாரத்தில் 27ம் தேதி பொய்யுண்டார் கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஈச்சங்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, பஞ்சநதிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆழிவாய்க்கால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சோழபுரம் மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தென்னமநாடு ராமவிலாஸ் உயர்நிலைப்பள்ளி, கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி, ராகவாம்பாள்புரம் ஆர்சுத்திப்பட்டு சமுதாயக்கூடம், தொண்டராம்பட்டு (கொத்தயக்காடு) வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆம்பலாபட்டு தெற்கு (குடிகாடு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெறவுள்ளன. முகாம் நடைபெறும் விவரங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சிகள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். எனவே, முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். இதில் பெறப்படும் அனைத்து மனுக்களும் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களில் தீர்வு வழங்கப்படும் என கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.