தஞ்சாவூர், செப். 6: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரத்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர்களுக்கு தஞ்சாவூர் எம்பி முரசொலி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார்.
செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வகையில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கம்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு எம்பி முரசொலி நேரில் சென்று வாழ்த்துக்கூறி நினைவு பரிசு வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கு புத்தகங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் ஒரத்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அனுராதா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முகமது கனி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.