ஒரத்தநாடு, ஜூலை 6: ஒரத்தநாடு அரசு கல்லூரி பாட வேலையை மாற்றக் வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் காலை மற்றும் மதியம் இரண்டு வேலைகளில் கல்லூரி நடைபெற்று வந்த நிலையில். கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக காலை 9:30 மணிக்கு தொடங்கும் கல்லூரி மாலை 3 மணி வரை நடைபெறுவதால் இந்த கல்லூரியில் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், மன்னார்குடி, கரம்பக்குடி பட்டுக்கோட்டை, பேராவூரணி மேலும் தஞ்சை மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைசேர்ந்த மாணவிகள் 4000 க்கு மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.