ஒரத்தநாடு, ஜூன் 16: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 1921ம் ஆண்டு அரசு ஆண்கள் பள்ளியாக தொடங்கப்பட்டு சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் படைத்த இப்பள்ளியை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 2024 -25ம் கல்வியாண்டு முதல் பெண்கள் மற்றும் ஆண்கள் இருபாலரும் சேர்ந்து படிக்கலாம் என்று இருபாலர் பள்ளியாக மாற்றி உள்ளது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்கள் மட்டும் பயின்று வந்த பள்ளியை இனி பெண்களும் சேர்ந்து படிக்கலாம் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.