ஊட்டி, ஜூன் 24: கோத்தகிரி வட்டாரம் ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். கோத்தகிரி அருகே ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு இருவருக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம் மற்றும் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, பள்ளியின் கட்டமைப்பு வசதி, குடிநீர், கழிவறை, சமையல் கூடம், பகல் நேர பாதுகாப்பு மையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, பள்ளியில் அனைத்து மையங்களும் சுகாதாரமாகவும் தூய்மையாகவும் பராமரிப்பதை கண்டு தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் ஆசிரியர்களை பாராட்டினர். பின்னர், பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரத்தை உண்டு பரிசோதித்தார். மேலும், பள்ளியில் நடந்த நிகழ்ச்சியல், மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் நூல்கள் வழங்கி சிறப்பித்தார். அப்போது ஒன்றிய பொறியாளர் அப்பாதுரை உடன் இருந்தார்.