Friday, March 1, 2024
Home » ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

by Ranjith

 

கும்பகோணம், டிச.24: கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 140க்கும் மேற்பட்ட எம்பிக்களை இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், பாஜக அரசு பதவி விலக கோரியும் கும்பகோணம் தலைமை அஞ்சலக வாயிலில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமையிலும், மாநகர தலைவர் மிர்ஷாவுதீன் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், மாநகர துணை செயலாளர் பிரியம் சசிதரன், திமுக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாடாகுடி செல்வராஜ், மதிமுக துணை பொதுச்செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட மற்றும் கும்பகோணம் மாவட்ட செயலாளர்கள் முல்லை வளவன், ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்டு நகர செயலாளர் செந்தில்,

காங்கிரஸ் நிர்வாகிகள் பாலதண்டாயுதம், சிவஞானம், மணிகண்டன், வண்டுவாஞ்சேரி அசோகன், சுதாகர், திருபுவனம் சீனிவாசன், மணி சங்கர், நாராயண், சீனுவாசன், நெல்சன், சம்பந்தம், விஜயகுமார், மணிராஜ், முருகன், சுந்தர் ராஜ், திருநாகேஸ்வரம், சீனு, கார்த்திக், லஷ்மணன், செல்வராஜ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளும் கட்சி கொடிகளுடன் பங்கேற்று ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். முடிவில் மாநகராட்சி மேயர் சரவணன் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

2 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi