கரூர், செப். 30: ரயில் மறியல் செய்ய முயன்ற ஆதித் தமிழர் கட்சியை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர், ஆதித் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜிவ்காந்தி தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் நேற்று மோடி அரசை கண்டித்து ரயில் மறியல் செயதற்காக கரூர் ரயில் நிலையம் வந்தனர்,
இதில் சனாதன தர்மத்தை மீண்டும் ஏற்படுத்த முயலும் பாஜ அரசே, திட்டங்களை திரும்பபெற வேண்டும். இந்தியாவின் சமூக நீதியை சிதைக்கும் மோடி அரசை கண்டிக்கிறோம் என கோஷங்கள் எழுப்பியபடி கரூர் ரயில் நிலையம் நோக்கி கோஷங்களை எழுப்பியவாறு உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கரூர் டவுன் போலீசார் தடுத்து நிறுத்ததினர். ரயில் மறியல் செய்ய முயன்ற ஒரு பெண் உட்பட 6 பேரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.