முத்துப்பேட்டை, ஜூன் 7: முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கம் இணைந்து ரேஷன் கடையில் குளறுபடிகளை செய்யும் .ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.பி.எம் நகர செயலாளர் ஜெயராமன், மாதர் சங்க நகர தலைவர் கலையரசி தலைமை வகித்தனர். நிர்வாகிகள் திருமறைச்செல்வி, கண்ணகி முன்னிலை வகித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு, மாவட்ட குழு உறுப்பினர் செல்லதுரை, ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி. மாதர் சங்க மாவட்ட தலைவர் பவானி கண்டன உரையாற்றினர்.
இதில் அங்காடியில் பொருட்கள் வாங்க கைரேகை வைக்க சொல்லி மக்களை அலைய விடுவதை கண்டித்தும் குடும்ப அட்டை கொண்டு வருபவர்கள் மூலம் பொருட்கள் கொடுக்க வலியுறுத்தியும் அங்காடியில் ரேகைவைப்பது தவிர்த்து நேரடியாக பொருட்கள் வழங்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் இல்லாவிட்டாலும் அட்டை கொண்டுவருபவர்கள் மூலம் பொருட்களை வழங்க வேண்டும. மாதம் முழுவதும் பொருள்கள் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பபட்டது. இதில் நகர குழு நிர்வாகிகள் மணிகண்டன், இளையராஜா, சேகர், சாகுல் உட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.