கூடலூர்,ஜூலை4: நீலகிரி மண்டலத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் வேண்டுகோளின்படி வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் தொழிலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்போராட்டத்தில் எல்பிஎப், சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, சிஎஸ்எம்எஸ் உள்ளிட்ட போக்குவரத்து கழக மத்திய தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. இதனையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நீலகிரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு அனைத்து சங்கங்களின் கோரிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கூடலூர் கிளைச் செயலாளர் உதயசூரியன், செல்லையா, லோகநாதன், மயில்வாகனம், சிவகுமார், சுப்பிரமணி, வினோத், முரளிகுமார், பிரசன்னா, சந்திரகுமார், ராகேஷ், நவ்ஷத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.