நாகப்பட்டினம்,செப்.5: ஒன்றிய அரசை கண்டித்து திட்டச்சேரி பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் நடந்தது. திருமருகல் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பொன்மணி முன்னிலை வகித்தனர். கீழ்வேளூர் தொகுதி எம்.எல்.ஏ., நாகை மாலி பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். விஷம் போல் உயரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் மருத்துவமனையை கட்டி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கத்தின் போது வலியுறுத்தி பேசினர். மாவட்ட குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி, பாலு, காரல்மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.