நீடாமங்கலம், ஜூன் 19: நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் காளியப்பன் தலைமை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருத்தசாமி, விவசாய சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு ராதா, ஒன்றிய செயலாளர் ஜான் கென்னடி ,விவசாய சங்க ஒன்றிய தலைவர் பாண்டியன், ராஜா, ராபர்ட் ப்ரைஸ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் மத்திய, மாநில அரசுகள் நெல், பருத்தி, எள்ளு ஆகிய பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் 100 நாள் வேலையை உடனே தொடங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை கொடுத்து தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். கிராம புறங்களில் உள்ள பாசன வாய்க்கால்களை அனைத்தையும் தூர்வார வேண்டும். நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவரை பணி நியமனம் செய்ய வலியுறுத்தப்பட்டது.