நித்திரவிளை, நவ.9: தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்ட பணியாளர்களுக்கு, கடந்த 3 மாதங்களாக கூலி வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து விவசாய தொழிற் சங்கம் சார்பில், ஒப்பாரி வைக்கும் போராட்டம் சூழால் சந்திப்பில் வைத்து நடந்தது. அடைக்காகுழி வட்டாரத் தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் வினிஷ்குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தை சி.பி.எம். அடைக்காகுழி வட்டாரச் செயலாளர் ரெஜி துவங்கி வைத்தார். விவசாய சங்க வட்டாரக்குழு உறுப்பினர்கள் சுனில்குமார், ஜஸ்டின்ராஜ் வாழ்த்தி பேசினர். வட்டாரக்குழு உறுப்பினர்கள் ராஜன், வின்சென்ட், ஜாண்றோஸ்., கவுன்சிலர் பத்மகுமாரி உட்பட 40 பெண்களும் 25 ஆண்களும் கலந்து கொண்டனர்.