Tuesday, February 27, 2024
Home » ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

by Ranjith

 

மயிலாடுதுறை,ஜன.9: மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக அரசு கேட்ட நிவாரண நிதியை மத்திய அரசு உடனே வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியில் ஒன்றிய செயலாளர் மனோன்ராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் இம்மானுவேல், சர்புதீன், ஜெகதீஸ்வரன், விக்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் இடும்பையன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட பெரும் சேதத்தை ஈடுகட்ட தமிழக அரசு கோரிய ரூ. 21 ஆயிரத்து 692 கோடி நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். மத்திய அரசு பாரபட்சம் காட்டாமல் தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

You may also like

Leave a Comment

thirteen + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi