தூத்துக்குடி, ஆக. 1: ஒன்றிய அரசின் வீர தீர செயலுக்கான விருது பெற்ற தூத்துக்குடி வீரர்களை அமைச்சர் கீதாஜீவன், கலெக்டர் லட்சுமிபதி ஆகியோர் பாராட்டினர். ஒன்றிய அரசின் 2023ம் ஆண்டு வீரதீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா விருதினை தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார், மரிய மிக்கேல் ஆகியோர் பெற்றுள்ளனர். இவர்களை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். தொடர்ந்து தூத்துக்குடி வந்த விஜயகுமார், மரிய மிக்கேல் ஆகியோர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று கலெக்டர் லட்சுமிபதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
ஒன்றிய அரசின் வீரதீர செயலுக்கான விருது பெற்ற தூத்துக்குடி வீரர்களுக்கு பாராட்டு
69