காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் உள்ள தனியார் விடுதியில் ஒன்றிய பாஜ அரசின் 11 ஆண்டு சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பாஜ தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் பங்கேற்று 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த சாதனைகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கினர்.
பிரதமர் மோடியும் சாதனைகளை கிராமங்கள் தோறும் தின்னை பிரசாரம் மூலம் எடுத்துரைத்து சிறந்த ஆட்சி மேற்கொள்வதை தெரிவிக்க உள்ளதாகவும், தமிழகத்தில் கோயில்களில் நடைபெறும் திருப்பணிகளில் உபயதாரர்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்து சமய அறநிலைத்துறை கோயில்களில் உள்ள உண்டியலில் பணம் எடுப்பது, சிலைகளை திருடுவது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகிறது தெரிய வருகிறது.
இதுகுறித்து வழக்குகளும் தொடரப்பட்டு நடைபெற்று வருகிறதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் பாஜ நிர்வாகிகள் அதிசயம்குமார், ஓம் சக்தி ஜெகதீசன், உத்திரமேரூர் பாஜ நிர்வாகி ராஜவேலு உள்ளிட்ட சேர ஏராளமான பாஜ நிர்வாகிகள் உடன் இருந்தனர்.