கும்பகோணம், ஆக. 6: கும்பகோணத்தில் வடக்கு மாவட்ட காங்கிரசார் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தியை தரக்குறைவாக பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூரை கண்டித்து, தஞ்சாவூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கும்பகோணம், காந்தி பூங்கா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் லோகநாதன் தலைமை தாங்கினார். மாநகர காங்கிரஸ் தலைவர் மிர்ஷாதீன், வண்டுவாஞ்சேரி அசோகன் மற்றும் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் தலைவர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுக்குழு உறுப்பினர் தியாகராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், வட்டார தலைவர்கள் மணிசங்கர், தமிழ்ச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலதண்டாயுதம், மாவட்ட செய்தி தொடர்பாளர் தண்டாளம் சரவணன், மாநகர துணைத்தலைவர்கள் நாராயணன், நெல்சன், மார்க்கெட் சங்கர், பழனிவேல், நிர்வாகிகள் ஐஎன்டிசி மாரியப்பன், கார்த்திகேயன், சாதிக், ஜாகிர் உசேன், சின்னதுரை, விஜயகுமார், லாரன்ஸ், ஜோஷ்வா, மாமன்ற உறுப்பினர் ஐயப்பன், கணபதி மணிராஜ் ரியாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.