ஒட்டன்சத்திரம், ஜூன் 20: ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தொப்பம்பட்டி மத்திய ஒன்றியம், கீரனூர் பேரூர் திமுக இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஆலோசனை கூட்டம் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆலோசனையின்படி நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பொன்ராஜ் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, கிளை பகுதிகளில் இளைஞரணி நிர்வாகிகள் நியமிப்பது, தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் திண்ணை பிரசாரம் மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார் மற்றும் இளைஞரின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.