ஒட்டன்சத்திரம், ஜூன் 23: ஒட்டன்சத்திரம் அருகே காப்பிலியபட்டியில் உள்ள கல்வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பழநி மெய்தவ பொற்சபையின் நிறுவனர் மெய்தவம் அடிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பள்ளியின் துணை முதல்வர் மங்கையர்கரசி, மூத்த ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசி முன்னிலையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதில் பள்ளி ஆசிரிய- ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.