ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் உள்ள பட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்றுநோய்கள் குறித்தும், ரத்தசோகை குறித்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளியின் தாளாளர் கண்ணம்மாள் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பூங்கொடி முன்னிலை வகித்தார். மருத்துவர் ஆசைத்தம்பி ரத்த சோகை பற்றிய விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள் வினோதினி, பவித்ரா, தனு ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட உதவி அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.