ஒட்டன்சத்திரம், ஜூலை 4: ஒட்டன்சத்திரம் சக்தி நகரில் மகாலிங்கேஸ்வரர், சவுடம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவ விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக மகாலிங்கேஸ்வரர், சவுடம்மனுக்கு மாலை மாற்றுதல், பூப்பந்து விளையாடுதல், மோதிரம் தேடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து மகாலிங்கேஸ்வரர், சவுடம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து சிவாச்சாரியார்கள் திருக்கல்யாண வழிபாடு குறித்து பக்தர்களுக்கு எடுத்துரைத்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய குழுவினர் செய்திருந்தனர்.