ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள், வியாபாரிகள் அதிகளவில் கலந்து கொண்டனர். ஏலத்தில் 23.07 குவிண்டால் மட்டை தேங்காய் வரத்து வந்தது. மட்டை தேங்காய் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.675க்கும், குறைந்தபட்சமாக ரூ.625க்கும் ஏலம் போனது. ஏலத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவராமகிருஷ்ணன், இளநிலை உதவியாளர் இந்துமதி, மண்டி ஆய்வாளர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.