ஒட்டன்சத்திரம், ஜூலை 2: ஒட்டன்சத்திரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள், தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்களை திண்ணை பிரசாரம் மூலம் மக்களிடம் எடுத்து செல்வது குறித்து எடுத்துரைத்தார். இதில் தொகுதி தேர்தல் பார்வையாளர் பரணி கே.மணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் பாசப்பிரபு, மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், சுப்பிரமணி, பாலு, பொன்ராஜ், தங்கம், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, நகர மன்ற தலைவர் திருமலைச்சாமி, செயற்குழு உறுப்பினர்கண்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தினேஷ் மற்றும் இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.