ஒட்டன்சத்திரம், மார்ச் 12: ஒட்டன்சத்திரத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆலோசனையின் பேரில் நகர திமுக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. நகர அவை தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட அவை தலைவர் மோகன், செயற்குழு உறுப்பினர் கண்ணன், நகர்மன்ற தலைவர் திருமலைச்சாமி முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் ஒட்டன்சத்திரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறவுள்ள தமிழ்நாடு வெல்லும் என்ற கண்டன பொது கூட்டத்திற்கு அதிகளவில் நிர்வாகிகள் கலந்து கொள்ளுதல், கோடை காலத்தை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைப்பது, பாராளுமன்ற உறுப்பினர்களை இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு செயலாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், இளைஞரணி, மாணவரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரத்தில் திமுக செயற்குழு கூட்டம்
0
previous post