சென்னை: கொரோனா காரணமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டுமே நடைபெற்றது. தற்போது நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் வசதிக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகும் வசதியையும் ஐகோர்ட் அனுமதித்துள்ளது. ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் அல்லாமல் வழக்கு தொடர்ந்தவர்களே ஆஜராக கூடியவர்கள் ஆகியோரின் வசதிக்காக நேரடியாகவும், வீடியோ கான்பரன்ஸ் மூலமும் ஆஜராகும் வசதியை உயர் நீதிமன்றம் அமல்படுத்தவுள்ளது. மார்ச் 3ம் தேதி முதல் வெள்ளிக் கிழமைகளில் நேரடி மற்றும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரணை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது….