புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக இருந்த போது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ.305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. அதேப்போன்று ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கு கீழமை விசாரணை நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் கீழமை விசாரணை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் விசாரணை நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தார். ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி பல்வேறு நிவாரணங்களை பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது….