பட்டிவீரன்பட்டி, ஜூன் 26: திண்டுக்கல்- வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அ பிரிவு என்ற இடத்தில் பட்டிவீரன்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும் வகையில் டூவீலரில் வந்த ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் ஏழரை கிலோ புகையிலை, குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில் அவர் வத்தலக்குண்டு அருகேயுள்ள மீனாகன்னிபட்டியை சேர்ந்த நவீன்குமார் (32) என்பது தெரியவந்ததது. இதையடுத்து போலீசார் நவீன்குமாரை கைது செய்து, அவரிடமிருந்த புகையிை, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.