திருப்பூர், செப். 1: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சங்கத்தின் இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில்,“திருப்பூரின் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி ரூ.25 ஆயிரம் கோடி என்ற தரவு குறைவு என்றும் உண்மையில் அதை விட அதிகமாகவே உள்ளது.
இந்த கருத்தரங்குகள் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விற்பனையை மேலும் அதிகரிக்கும்” என்றார். பொதுச்செயலாளர் திருக்குமரன் கூறுகையில்,“இந்திய பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் இந்திய சந்தையில் தங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்த இது உரிய தருணம்” என்றார்.இதில் பலர் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். செயற்கை இழை ஆடை உற்பத்தி துணைக்குழுவின் தலைவர் அருண் ராமசாமி நன்றி தெரிவித்தார்.