குலசேகரம்,மார்ச் 10: ஏற்றக்கோடு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் தின விழா நடைபெற்றது. இதில் மாணவர்களின் அறிவியல் படைப்பாற்றல்கள் அடங்கிய கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ராஜம் மற்றும் ஆசிரியர்கள், திட்டக்குழு உறுப்பினர் சிவன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெசிந்த் மேபா ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவியரை வாழ்த்தினர். இதில் பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளை கண்டு பாராட்டினர்.