ஏற்காடு, செப்.1: வார விடுமுறையையொட்டி, ஏற்காட்டில் நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களிலிருந்தும் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், அனைத்து இடங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஏற்காட்டில் உள்ள காட்சிமுனை பகுதிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கிருந்தபடி பள்ளத்தாக்கின் இயற்கை அழகையும், மலை முகடுகளில் தவழ்ந்து சென்ற மேக கூட்டங்களையும் ரசித்து மகிழ்ந்தனர். இதே போல், அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களிலும், சுற்றுலா பயணிகள் அதிகமாக காணப்பட்டனர். ஏரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
previous post